"ஒருத்தன்கிட்ட இருந்து எடுக்குறது மட்டும் திருட்டு இல்ல, ஒருத்தனை எடுக்கவிடாம பண்றதும் திருட்டுதான்".
நவீன்: "இருக்குற உங்ககிட்ட இருந்து, இல்லாதவங்க நாங்க எடுக்குறது திருட்டுன்னா… இங்க கூரை இல்லாம மழையிலயும் வெயில்லயும் கஷ்டப்படுற கூட்டம் இருக்குற அதே இடத்துல, நாய்க்கும் காருக்கும் வீடு வெச்சிருக்கிற நீங்க எல்லாருமே திருடங்க தான், பக்தவத்சலம்.
ஒரு காலத்துல எல்லாருக்குமே பொதுவா இருந்த இந்த பூமியில, நாம எல்லாருமே ஒரே மாதிரி அம்மணமா தான் பொறந்தோம்.
ஆனா, நடுவுல உங்களை மாதிரி ஒரு கூட்டம் 'நாகரீகம்'ன்னு ஒண்ணை ஆரம்பிச்சு, உங்க தேவைக்கு அதிகமா எடுத்துக்க ஆரம்பிச்சதால… எங்களை மாதிரி ஒரு கூட்டம் எடுக்குறதுக்கு எதுவுமே இல்லாம, இன்னைக்கு வரைக்கும் அம்மணமாவே இருக்கோம்.
எங்களோட அடிப்படை வாழ்க்கையை திருடிதான், உங்களோட இந்த மேல்தட்டு நாகரீக வாழ்க்கையே பக்தவத்சலம்."
பக்தவத்சலம்: "டேய்… சம்பாதிக்குறதுக்கும், திருடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குடா. இதெல்லாம் நான் சம்பாதிச்சது."
நவீன்: "100 மாம்பழம் இருக்குற ஒரு மாமரத்துக்கு கீழே, 100 பேர் பசியோட நின்னாங்கன்னா… அங்க, ஆளுக்கு ஒரு பழம் சேரணும்ங்கிறது இயற்கையோட தர்மம்.
ஆனா, அந்த 100 பேர்ல உங்களை மாதிரி திறமையும் பலமும் அதிகமா இருக்குற 5 பேர், மத்தவங்களை விட சீக்கிரமா 5 பழம் எடுத்துட்டாங்கன்னா... 20 பேர் ஒரு பழம் கூட கிடைக்காம பசியில வாடி, வேற வழியே இல்லாம அந்த அதிகமா பழம் வைச்சிருக்கவன்கிட்ட பிச்சை கேட்டு நிப்பாங்க.
இப்போ அந்த அதிகமா பழம் வைச்சிருக்கவன், இந்த ஒண்ணுமே இல்லாதவங்களை வெச்சு 5 மாமரம் நட்டு, ஒவ்வொரு மரத்துல இருந்தும் நூறு நூறு பழங்களை பறிக்க வெச்சு, அவங்களுக்கு சம்பளம்ங்கிற பேருல அவங்க எடுத்துக் குடுத்த 100 பழத்துல இருந்தே ஒரு பழத்தை எடுத்துக் குடுப்பான்.
இதான், இங்க நடக்குது.
ஒருத்தன்கிட்ட இருந்து எடுக்குறது மட்டும் திருட்டு இல்ல, பக்தவத்சலம். ஒருத்தனை எடுக்கவிடாம பண்றதும் திருட்டுதான்."
பக்தவத்சலம்: "ஆடத் தெரியாதவன் மேடை கோணல்னானாம்..
டேய்… இங்க திறமை இருக்கிறவன் ஜெயிக்கிறான், இல்லாதவன் தோக்குறான். இதான், உலக நியதி… Survival of the fittest."
நவீன்: "அப்படிப் பார்த்தா… இன்னைக்கு நாங்கதான் பலமானவங்க, நீங்க பலவீனமானவங்க.
- மூடர்கூடம் (2013).
Pic Credits: https://www.facebook.com/solaimani.solaimani.5876
