Sunday, 19 August 2018

பாரதி சிறுகுறிப்பு - வ.உ.சி.யை வாழ்த்தியவன் - மக்களின் செயலறிந்து இகழ்ந்து நொந்தான்

‘வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ!’
என்று சிறைசென்றபோது வ.உ.சி.யை வாழ்த்தியவன் பாரதி. சிறையிலிருந்து வெளிவந்தபோது, அந்த மகத்தான மனிதனை நாடு மறந்துவிட்டதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் நிலைகுலைந்தது பாரதியின் இதயம்.

‘பிள்ளைவாள்,
அந்தக் கப்பல்களை
வெள்ளைக்காரனுக்கே
விற்றுவிட்டார்களாமே…
அதைவிட
சுக்கல்சுக்கலாய் உடைத்து
கடலில் கரைத்திருக்கலாமே…’
என்று கொதிக்கிறான் பாரதி, தன்னைப் பார்க்க புதுச்சேரிக்கு வந்த வ.உ.சி.யிடம்!

‘மாமா, உங்களுக்குத் தெரியாதா,
மானங்கெட்ட நாடு இது’ என்கிறார் வ.உ.சி.

‘நாட்டை இகழாதீர்கள்…..
மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்…’
என்று அந்த நிலையிலும் திருத்துகிறான் பாரதி, தேசத்தை விட்டுக் கொடுக்காமல்!

அதற்குப் பிறகாவது நாம் திருந்திவிட்டோமா? மனம் நொந்துபோய், பாரதிக்கே அதைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது…..

‘நாங்கள் மானங்கெட்ட மக்கள், பாரதி!’

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384

பாரதி சிறுகுறிப்பு - அகவை 37 அடைந்த தருணம் - கைதி எண் 253


பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த ‘இந்தியா’ பத்திரிகையின் சட்டப்பூர்வ ஆசிரியர் சீனிவாசன் 1908ல் கைது செய்யப்படுகிறார். உண்மையான ஆசிரியரான பாரதியும் கைதுசெய்யப்பட்டுவிடுவார் என்கிற நிலை. பிரிட்டிஷ் அரசின் வலையிலிருந்து தப்பிக்க, வ.உ.சி. உள்ளிட்ட நண்பர்களின் வற்புறுத்தலால், புதுச்சேரி போய்விடுகிறார் பாரதி. (புதுச்சேரி அப்போது பிரெஞ்சுக் காலனி.)

புதுச்சேரி பிடித்திருந்தாலும் ‘ஹோம் சிக்’ வதைத்துக் கொண்டே இருக்கிறது
பாரதியை! எப்படியாவது தமிழகத்துக்குத் திரும்பிவிடத் துடிக்கிறார். 1918 நவம்பர் 20ம் தேதி புதுவையிலிருந்து புறப்பட்டு விடுகிறார். இந்தியப் பகுதிக்குள் நுழைந்தவர், கடலூருக்கு அருகே கைதுசெய்யப்படுகிறார். 4 நாள் கடலூர் துணைச் சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தவர், 24ம் தேதி கடலூர் மாவட்ட தலைமைச் சிறைக்கூடத்துக்கு மாற்றப்படுகிறார். 25 நாள் சிறைவாசத்துக்குப் பின், டிசம்பர் 14ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அது, 37வது வயதில் அவர் அடியெடுத்துவைத்த நான்காவது நாள்.

அந்த 25 நாட்களில் சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து பழைய நிகழ்வுகளையும் நினைவுகளையும் கனவுகளையும் உணர்வுகளையும் பாரதி நினைத்துப் பார்ப்பதாக விரிகிறது – கைதி எண் 253. பாரதியின் கவிதைகளையும் சிந்தனைகளையும் பொருத்தமான இடத்தில் பொருத்தி, வியக்க வைக்கிறார் எழுத்தாளர்  சிற்பி.

இது சிற்பி எழுதியதா, பாரதி எழுதியதா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது பல இடங்களில்!

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384

Sunday, 8 July 2018

முதல் லெட்டர் - பிரபா ஆனந்தி

#KatradhuTamizh #TamizhMA

என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு letter,  Still I Remember my first letter

பிரபா,

நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும், நானும் அம்மாவும் இங்க maharashtra'ல தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்.  நீ வர்றதுக்கோ letter எழுதறதுக்கோ ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்.

நேரத்துக்கு சாப்பிடு,

வாரத்துக்கு மூணு நாளாவது குளி,

அந்த socks'ah  துவைச்சு போடு,

நகம் கடிக்காத,

கடவுள வேண்டிக்கோ!

- ஆனந்தி




Sunday, 17 December 2017

மௌன பூகம்பம்

இது வைரமுத்து எழுதிய குறுங் காதல் கதை… ஆகா சிறந்த வர்ணனை, முடிவு சற்று எதிர் பாராததுவே…

வைரமுத்து
அவளின் ஞாபகங்களே அவனுக்குச் சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்பேதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்க்கிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

Saturday, 16 December 2017

சுஜாதா தாட்ஸ் பற்றி கரு. பழனியப்பன்

சுஜாதா தாட்ஸ் பற்றி ஒரு மேடையில் இயக்குனர் - எழுத்தாளர்
கரு. பழனியப்பன் அவர்கள் கூறியது

சுஜாதா 
1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம். கேள்வி கேட்காதா நம்பிக்கை, ஏன் என்றால் அரசியல், விஞ்ஞானம் எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே குழம்பி நிற்கிறது

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது. காபி பவுடர் வாங்குவதிற்கும், சில்லரை சாமான் வாங்குவதற்காக இருக்கலாம்.
கரு. பழனியப்பன்

3. மூனு மணி ஆரம்பிக்கும் மேட்னி ஷோ போகாதீர்கள். படிப்பு கெடும், தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், இதில் காதல், கதை அடங்காது.

5. குறைந்த பச்சம் ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள், அப்பாவிடம் ஜீன்ஸ், டி-ஷர்ட் கேட்பதற்கு முன்பு

6. உங்களுக்குக் கீழே உள்ள சராசரி அடித்தட்டு மக்களைப் பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும், கண்டிப்பாகக் காதல் மட்டும் வேண்டாம், ஏன் என்றால் காதல் தேவை இல்லாத சில இடங்களில் காத்திருக்க வைக்கும், பலர் கண்ணில் அகப்பட்டுக் கொள்வோம்

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள், எதயவுது ஆர்வத்துடன் விளையாடுங்கள், இதில் கம்ப்யூட்டர் கேம்ஸ் அடங்காது. வியர்வைச் சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும், வீண் சிந்தனைகள் வராது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். அதிக பச்சம் ஒன்பது : ஐந்துக்கு எல்லாம் வீடு சேர்ந்துருங்க, ஏன் என்றால் இரவு தான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள். நடந்தது, நடக்காதது எதையாவுது பேசி நேரத்தை செலவிடுங்கள்

இதில் ஏதாவது ஒன்றைத் தினம் செய்து வாருங்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்

யார் தான் கடவுள்?

யார் தான் கடவுள் என்று எழும்பிய கேள்விக்கு கண்ணதாசன் கூறிய கவிதை பதில்...

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

Thursday, 15 June 2017

யாருக்கு விதி?எங்கே எப்படி முடியும்!!!


படித்ததில் பிடித்தது

இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.  ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.  அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.  உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,  இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள், கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,  கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?  அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,  இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.  உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.  நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.  அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.  வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.  விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.
உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.  

வாருங்கள்....  நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன், மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார். விஷயம் முழுவதையும்கேட்ட அவர், ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில், எந்தசூழ்நிலையில், என்னகாரணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.  அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள் அந்த அறைக்குச்சென்று, கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.  இப்படியாக இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.  உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்.... அதில்,,,

இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எமதர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!  விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே 

தெரியாது என்பது தான் உண்மை?!  

Sunday, 11 June 2017

தூர் – நா.முத்துக்குமார் - சுஜாதாவின் பாராட்டு





“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.


ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!

‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

    -    நா. முத்துக்குமார்.


(கணையாழி இதழ் விழா ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசிய போது, “கணையாழி இதழில் வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” என்றார். உலகத்துக்கு நா.முத்துக்குமார் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டிய நிகழ்ச்சி அது.)

 நன்றி: பதிவு

Saturday, 11 June 2016

Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 3



பதிப்பில் இருக்கும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 2  ஐ மற்றும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 1  ஐ
படிக்க கிளிக் செய்யவும்,  அந்த அதியாயங்களுக்கும்  இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

முகநுளில் என்னை கவர்ந்த ஒரு சிறு கதை, சற்று மாற்றங்கள் செய்து கதையாய் எழுதி உள்ளேன்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்  முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ  அவர் தான் அடுத்தமேலாளர்என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.  அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும்  ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.

அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.
ராமு  தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.  அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.  அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்


ராமு  தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.  முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு  தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான்கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு  மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது  | நேர்மையை விதையுங்கள் | பதவியும் பணமும் தேடிவரும்


பதிப்பில் இருக்கும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 2  ஐ மற்றும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 1  ஐ
படிக்க கிளிக் செய்யவும்,  அந்த அதியாயங்களுக்கும்  இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

Sunday, 5 June 2016

என் இனிய NRI's (வெளிநாடு வாழ் இந்தியர்)


எழுத்தாளர் சுஜாதாவின் பக்கங்களில் இருந்து சில வரிகளை எடுத்து கோர்வை படுத்தி உள்ளேன்

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.

அவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்…  இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.

இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன். 24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே… அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை? எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

நன்றி  சுஜாதா  SIR அவர்களுக்கு :-) 

Sunday, 22 May 2016

ஈமெயில் முகவரி ஒருவரின் அடையாளத்தை மாற்றியது


என் நண்பர் ஒருவரின் இடம்  எனக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு தவறி போகின்றது என்பதை  பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் கூறிய குட்டி கதை

"வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்"

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான்.

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா?

எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’!!! என்றான்

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.  வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 100/- ரூபாய் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம்
வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 20/- ரூபாய்  லாபம் கிடைத்தது மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..?

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’என்றார் வியாபாரி...!

- சந்திரா

Sunday, 24 April 2016

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து



கவிஞர் வைரமுத்துவின் பக்கங்களில் இருந்து சில வரிகளை எடுத்து கோர்வை படுத்தி உள்ளேன்

“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?

எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?

இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை

எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை

கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்

அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை

மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை

ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை

பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?

மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்

நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்

“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”



நன்றி கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு


Saturday, 5 March 2016

ஜன்னல் வழியே


அன்று மாலை 6:35 மயிலாப்பூர் ரயில் நிலையம், வந்து நின்ற வண்டியைத் தள்ளி செல்லும் அளவுக்குக் கூட்டம்  திருவிழா போல் தோன்றியது, ஆமாம் அன்று கபலிஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா, கடைசி பெட்டியில் குடும்பத்துடன் 12 பேரையும் ஏறு ஏறு  என்று உரக்கக் குரல் கொடுத்து, உள்ளே சென்று உட்கார இடம் தேடினர் நமது சிதம்பர சங்கர ராம ஐயர்.  ஆனால் பெட்டிக்குள் நமது குறவன் குறத்தி மார்கள் முழுதாக பெட்டியை ஆக்கிரமித்து இருந்தார்கள் மற்றும் அவர்கள் பணியில் சத்தம் போட்ட பாடிப் பேசி சிரித்து இருந்தனர்.  இதனைப் பார்த்து யோசிக்கும் முன்பே ரயில் மெல்ல நகரத் தொடங்கியது, சகிக்க முடியாமல் மேல்  கம்பியை பக்கத்தில் இருப்பவரிடம் ஷேர் செய்தார்.

அவர்களைக் கண்டு நமது சங்கர  ராமன்  தனது  கோபத்தைக்  குடும்பத்தினர் மீது கட்டினர், உங்களால் தான் இவளவு நேரம் ஆகியது. ஈஸ்வரா இதுவரை 8 ரயில்களை விட்டாயிற்று இதையும் விட்டா ஆத்துக்கு போக நிறைய நேரம் ஆகிடும் இங்கு இருந்து மத்திய கைலாஷ் போய், அங்கு இருந்து through பஸ் சிதம்பரதிருக்கு கடைச்சா பரவலா, இல்லை என்றால் பாண்டிச்சேரி  போய்டு அங்கு இருந்து ஊருக்கு  போகவேண்டும். எப்படியும் நாளை விடிஞ்சிரும்.  இத்துள இந்த பீடய்களுடன், பாண்டிச்சேரி  சென்றால் தண்ணி வண்டி தான் என்று புலம்பி கொண்டே ஜன்னல் வழியே கபலிஸ்வரர் கோயில் கோபுரத்தைத் தரிசனம் செய்யத்  தேடினர், ஆனால் தென் படவில்லை இருந்தாலும் கண்ணை மூடிக் கும்பிட்டு கொண்டார்.

வண்டி மந்தைவெளியைத் தாண்டா, சங்கர ஐயர் சத்தம் போட்டபடி, குறவன் குறத்தி மார்களின் பிள்ளைகளை அதட்டி நகர்ந்து செல்லுங்கள்  மேலே விழுந்து வைக்க போறிங்கள்.  குறத்தி ஒருத்தியின் பெண்பிள்ளை ,  இல்லை சாமி நீங்க ஆச்சாரமான ஆளுங்கள், வண்டி குலுக்கலா மேலே பட்டு இருக்கலாம், நாங்கள் வேண்டும் என்று செய்ய மாட்டோம் சாமி என்று பொறுமையாக பேசினால், அதற்கும் சங்கர ஐயர் முகதோற்றதை கோவமாகவும்  உதடுகளை முணுமுணுத்தபடி  பகவானே என்று கூறி திரும்பினர்.

பின்னர் பட்டினப்பாக்கம் ஸ்டேஷன் நெருங்க, ஐயர் இவர்களைப் பார்த்து கோபத்துடன் எங்கேயாவது இந்தக் கூட்டத்திற்கு அறிவு இருக்க, இவ்வாறு ஒரு ரயில் பெட்டியை ஆக்கிரமித்து வரோமே, நாம் இருந்த மத்தவங்க எப்படி வருவாங்கனு யோசிக்குதுங்கள , புலம்பல் சத்தம் அவர்களின் காதுகளில் விழ.  அதைக் கேட்ட அவர்கள் சாமி நாங்களும் மனிதர்கள் தான், காலையில் இருந்து அலைஞ்சு, திரிஞ்சு, கடைசி பெட்டியில் வந்து உட்காந்து இருக்கிறோம், ஏன் சாமி எங்களுக்கு இங்கேயும் இடம் இல்லையா?  உங்களை மாதிரி யாண அலுங்கல் எங்கள் மதிச்சாதான் மத்தவங்களும் எங்களையும் மனிதர்களா பார்பாங்க.  நீங்க எல்லாம் கடவுளுக்கு சேவை செய்றவங்க, உங்களை எல்லாம் நாங்கள் பெரிய எடத்துல வச்சிபாக்குறோம்

ஐயர்: அம்மம் அம்மம், சிதம்பரத்தில் இருந்து அதுக்கு தானே வந்தேன் பாரு? அங்கு இருந்த குறத்தியின் குழந்தையைப் போ போ தள்ளிப் போ என்று அதட்டினர்

குறவர் ஒருவர்: என்ன சாமி நீ? உங்களை மாதிரி சிலர் இருக்க, எங்களைப் பலர் மதிக்க மாற்றங்கள்.  நாங்களும் சக உயிர் தான். நீங்கள் கும்பிடும்  கபலிஸ்வறருக்கு படம் கற்று கொடுத்தவரின் வர்க்கம் நாங்கள்.

ஐயர்:  அட பிரமாதம், நல்ல வாய் அடிக்கிற கூட்டம்  ச்சா சானு  தள்ளி ஒதுங்கினர்.

கோட்டுர்புரம் ஸ்டேஷன் நெருங்க, வண்டிக்குள் 6 இராணுவ வீரர்கள் ஏற முற்பட்டார்கள், அதைக் கண்ட ஐயர்r, ஈஸ்வராஹ், இவர்கள் வேற பெட்டியில் இடம் இல்லை அடுத்த ரயிலை பாருங்கள் எறங்குங்க முதலில்
எறங்குங்கனு  சத்தம் போட்டார்.  பின்பு வேற வழி இல்லாமல் போய் தொலையுங்கள், ஆத்துக்கு போய் மொத்ததுல தலை முழுகனும்னு என்று போலம்பினர்.

இராணுவ உடையுடன் துப்பாக்கி வைத்து இருந்த 6 பேர்களும் பெட்டியின் வாயிலில் தொங்கிய படி நிற்க, முற்பகுதியில் நம்மவர்கள் எல்லாம் ஒய்யாரமாக உட்கார்ந்தும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தும் நிற்க.
உள்ளே இருந்து குரவர்கள் கூட்டம்  சாமி அவர்களை இங்கே கூப்பிடுங்கள் அய்யா, இங்க வாங்க உட்காருங்கனு பெரிய கோஷம் போட்டபடி குபிடனர், நாங்கள்  நிக்கறோம் வாங்க அய்யா நீங்க உட்காருங்கனு கையை பிடித்து அழைத்தனர்

சற்றே கோபம் அடைந்த  ஐயர், இங்க பலர் நிற்க அவர்களுக்கு இடமா துப்பாக்கியை  பார்த்ததும் பயம், போன ஸ்டேஷன்ல  நான்  பெசியதுற்கு எதிர்த்து பேசிட்டு, அதான் உங்களுக்கு எல்லாம் பயம் புடுதுற மாதிரி ஆட்கள் இருந்தா தான் அமைதியா ஆவிங்க.

குருவன்:  சாமி, எங்களுக்கு எதற்குப் பயம்.  வீடா? வாசலா?, கிடைக்கும் இடம் சொர்க்கம் அவளவுதான்.   இவர்களும்  எங்களைப் போல தான்! இது பயம் இல்ல சாமி மரியாதை.  நாட்டுக்கு வெளியில் நின்று தான் நம்மளவங்காள  பத்துகுரங்க, இங்கயாவுது உள்ள நிம்மதியா உட்காரட்டுமே  ஏன் இங்கையும் வெளியே ஆபத்துல நின்றுகொண்டு வரனும்,  நியாயபடி உங்களவர்கள் முன்வரிசையில் இடம் கொடுதருகனும், பாவம் உங்களுக்கு ஏதோ அசதி  போல , அதான் நாங்கள் இடம் கொடுத்தோம்.

ஐயர், முகம் வாடிப் பேச வார்த்தை இன்றி,  குறத்தி மகளைத் தூக்கி கையில் வைத்து அவமானத்தில் தலை குனிந்து  ஈஸ்வரா என்று கண்களை மூடித் திறந்தார், மத்திய கைலாஷ் ஸ்டேஷன்,  ஜன்னல்  வழியே  கைலாசநாதர் கோபுரம் தரிசனம் கிடைய்தது வண்டியில் இருந்து படியில் இறங்க, கேழே பஸ்  ஸ்டாப் இல்  சிதம்பரதிருக்கு through பஸ்  காத்து  இருந்தது.

- சந்திரா

Monday, 29 February 2016

Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 2



பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - I  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  முதல் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

முகநுளில் என்னை கவர்ந்த ஒரு சிறு கதை, சற்று மாற்றங்கள் செய்து கதையாய் எழுதி உள்ளேன்

ஒரு நாய் கடைக்கு வந்தது..கடைக்காரர் விரட்டி விட்டார்..  திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்தது... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது..

அப்போது ரெட் சிக்னல், அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்... நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...  கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...  நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....  கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

Corporate தர்மம் உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்,
இவ்வாறு நாமும் ஒரு முறையாவுது நின்று இருப்போம்


"நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது"


பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - I  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  முதல் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

Saturday, 21 November 2015

ரிதம் - கண்ணகி

அந்த ஆட்டோக்காரர் என்னை ஏதோ கைகாமிச்சி சொன்னாரே… என்ன சொன்னாரு?

ஒன்னும் இல்லங்க…

இல்ல நிச்சயமா ஏதோ சொன்னாரு!

சொன்னா உங்களுக்கு கோவம் வரும்.

பரவாயில்ல.. சொல்லுங்க…

வேண்டாங்க எதுக்கு வம்பு!

சும்மா சொல்லுங்க…

இல்ல ட்ரெயின் ஸ்ட்ரைக் அன்னிக்கு உங்களை ஆட்டோல கூப்பிட்டதுக்கு நீங்க வரல. ஏன் வரலன்னு கேட்டான். கண்ணகி பரம்பரையாயிருக்குமுன்னு சொன்னேன்.. இன்னைக்கு ஒரே ஆட்டோல வந்தோமா.. ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களான்னு சிரிச்சிகிட்டே கேட்டான்.

அந்த ஆட்டோக்காரரை மறுபடியும் பாப்பீங்களா?

ஏன்?

பாத்தா சொல்லுங்க… உங்ககூட ஒரே ஆட்டோல வந்தாலும் நான் கண்ணகி பரம்பரைதான்.!!

Saturday, 31 October 2015

நல்லதோர் வீணை செய்தேன்

தாசில்தார் அலுவலகத்தி நான் கண்ட ஒரு நிகழ்வு, என்னை யோசிக்க வைத்தது, நம் சுதந்திர இந்தியாவின் அரசு அலுவலகங்களின் பங்கு மிகவே அதிகம், நாம் ஒரு நாள் தாசில்தார் ஆபீஸ் சென்று நமது சாதி, நாட்டுரிமை, குடியுரிமை மற்றும் நமது வருமான சான்றிதழை பெற நீண்ட வரிசையில் 3 மேசைகளில் 3 விதமான அலுவலர்களை சந்தித்து அவர் அவர் விருப்பு வெருபுகளுக்கும் அடங்கி ஒடுங்கி நமதுஆவணங்களை கொடுப்பது மட்டும் இன்றி தேவை படும் வகையில் சில நேரம் நமது சில்லறைகளையும் கொடுத்து கடந்து தாசில்தாரிடம்
கையெப்பம் பெறுவது மட்டும் அல்லாமல் வெளியில் அமர்ந்து இறக்கும் attender இடம் சீல்லயும் பெற்று வீடு திரும்புவதென்பது ஒரு பாரத போர் தான்.

இருந்தாலும் நான் MCA படிக்க வேண்டுமே அப்பா வுக்கு இன்று ஆபீஸ் சென்றால் தான், பின்பு admission நேரங்களில் அவர் office இல் இருந்து லீவ் எடுக்க முடியும் என்ற கட்டாயம், நானும் சென்று பார்த்து உள்ளேன்

அது என்ன டா   கொடுமை ?
அந்த சான்றிதழ்கள் 6 மாசம் தான் செல்லுமாம்!!!!. நான் என்ன 6 மாசம்
ஒரு முறை வேற நாடுக்கு மாரிடுரென ?
இல்லை சாதி  மாரிடுரென  ?

அது மட்டும் அல்ல என் அப்பாவின் சம்பளம் 2 அல்ல 3 வர்சத்துக்கு ஒரு முறை தான் குடுதல்  வருமானம் வருது!  என்ன தான் இந்த ரூல்ஸ் ?
புரியல?

அனாலும் எனக்கு அந்த சான்றிதழ்கள் வேண்டும் அப்போதுதான் நான் MCA க்கு apply செய்ய முடியும்.

அன்று நீண்ட வரிசையுல சொல்லும் படி பார்த்தா 2 அல்லது 3 பேர் தான் என் முன்னாடி இருந்தாங்க, நான் Register சார் பார்க்கும் முன் கர்ணாவய்  பார்க்க நின்று கொண்டு இருந்தேன் எனது முன்னால் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்  ரவி, இவர் கால்கள் ஊனம் உற்றவர் இரு கைகளும் கிடையாது,  ஆனால் நல்ல முக தோற்றம், மிகுந்த தைரியத்தோடு B.Tech முடித்து M.Tech apply செய்வதுற்கு என்னை போல சான்றிதழ்கள் வாங்க வந்து
இருந்தார்,

அவர்யிடம் பேசிய போத சில அலோசனய்களை கேட்டேன் எங்கு படிக்கலாம், எவ்வாறு entrance மற்றும் அதன் admission கள் நடக்கும் என்று ?

அவர் MCA  இல்லை என்றலும் ஏறதழா B.Tech admission னும் மக admission னும்  ஒரே மாதிரி தான் நடக்கும், இவ்வாறு பேசி கொண்டு இருந்த போது உடனே சத்தம் போடாதிங்க பா என attender ஒரு 35 வயது
இறுக்கும் பெண் மினுக்கான நடையுடன் ஒரு பொது வாக சத்தம் போட்டபடி நடந்து சென்றால்.

நமக்கு தான் தெரியுமே அரசாங்க உத்தியோகம் என்றால் இப்படி தான், என்ன பதவி எங்கு இருக்கிறோம் என்று எல்லாம் கிடையாது, அரசு உத்தியோகம் ஒரு விதமான மேதாவி தனம் மற்றும் திமிரை வெளி
கட்டும் நான் அனைவரையும் சொலல்லை சிலரை தான்.  ஒரு வழியாக கர்ணா அவரை அழைத்தார் அவர் இடத்தில் தோலில் மாட்டிய படி ஒரு பை வைத்து இருந்தார், அதில் பாதி மட்டும் மூடப்பட்டு இருந்தது ஏன் என்பதை புரிந்து கொண்டேன் ?  அவர் மட்டும் வந்து இருந்தார் ஒரு வேலை முழுவதும் மூடி வைத்தல் எங்கு அடுத்தவர் உதவியை நாட வேண்டும் என்று பாதியாயை வைத்து இருந்தார் உள்ள இருந்து ஒரு ஒரு documents களையும் இரண்டு கைகளை ஒன்று சேர்த்து தேவை கேட்ப மாதிரிகளையும், மற்றும் ஒரிஜினல்களையும் காண்பித்தார்.  இதன் பிறகு அவரின் விவரங்களை வந்தவர்கள் சொல்லும் படி கேட்டு எழுதுவுது தான் வழக்கம், அதன் படி அவர் இடத்தில் அப்பா மற்றும் அம்மா எங்கே யாராவுது உன்னை அழைத்து வந்து இருக்கான்களா ? அவர்கள் இல்லை என்று கூறினர் ரவி.  உடனே கர்ணா Sorry தம்பி, தெரியாம கேட்டுட்டேன் சரி அவர்கள் பெயரை என்ன வென்று கேட்டார்?  sorry சார் தெரியாது என்றார்.  அவர் பின்னல் நான் நின்று கொண்டு இருந்ததை பார்த்து கர்ணா  என்னை இவர் உனது அண்ணா னா தம்பி என கேட்டார்,

உடனே ரவி இல்லை எனக்கு யாரும் இல்லை அப்பா அம்மா நான் பிறந்து இப்படி இருந்தேன் என்று தெரிந்து hospital இல் விட்டுட்டு போய்டங்கனு எனை கொஞ்ச நாள் வளத்த nurse ஆயா தான் சொணங்கா

ஒஹ் இல்லை தம்பி நான் எந்தா data வா வச்சி சான்றிதழ்கள் இப்ப  உனக்கு கொடுப்பேன் ????  என்று
கர்ணா கேட்டார் ?

அவர் கேள்வி சான்றிதழ்க்காக இல்லை, காசுகளுக்கு அடி போட்டது புரிந்தது L, எனது கண்கள் கலங்கியது காரணம் ரவி இன் பதிலா ? இல்லை Register கர்ணா வின் பதிலா ? இன்று வரை தெரிய வில்லை.

  - சந்திரா

Sunday, 13 September 2015

ரேஷன் கார்டு - சுஜாதா

அதன் பாட்டுக்கு சமர்த்தாக இருந்த ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கார்ப்பரேஷன் அதிகாரி வந்து சொல்லிவிட்டுப் போனார். ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக உங்கள் இருப்பை நிரூபிக்கக் கூடியது.

சாய்பாபா கோயில் அருகே ஜனசந்தடியின் மத்தியில் மாடியில் இருந்தது அலுவலகம். எனக்கு அத்தனை மாடி ஏறமுடியாது என்று நாகராஜை அனுப்பி வைத்தேன். சற்று நேரத்தில் அவன் ஒரு அலுவலருடன் திரும்பி வந்தான். "பழைய கார்ட ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கங்க. இந்த பாரத்தை நிரப்புங்க. ஒரு போட்டோ ஒட்டிக் கொடுங்க" என்றார்.

நான், 'நண்பா, நன்றி' என்றேன்.

'பத்து ரூபா கொடுங்க.'

'எதுக்கப்பா?'

'பாரத்துக்கு. இதை கொடுத்து டோக்கன் வாங்கறதுக்கு தனியா சார்ஜ் பண்ணுவேன்' என்றார்.

'ஏம்பா, இந்த பாரம் ப்ரீ இல்லையா?' என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, 'கார்ல வந்துருக்கே, பத்து ரூபாய் குடுக்கமாட்டியா?' ஏம்பா டிரைவர், இது பத்து ரூபாதானே பாத்துக்க' என்று சொல்லிவிட்டு, முகத்தை சுருக்கிக்கொண்டு சென்றார். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றித் திட்டிவிட்டு வாங்கும் சிப்பந்தி. அவர் கார்ப்பரேஷன் அலுவலரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு சிறிய அரசாங்க அலுவலகத்தில் உள்ள சம்பாத்திய சாத்தியங்களை யோசியுங்கள். இலவசமாகக் கொடுக்கவேண்டிய விண்ணப்பங்களை ஒரு ஆள் கவர்ந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் என்று ஒரு நாளைக்கு நூறு பாரமாவது விநியோகிப்பார். இதில் நிச்சயம் சிப்பந்திகளுக்குப் பங்கு இருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் சம்பளம் கூடத் தேவையில்லை.

இந்த சதியை எதிர்த்து 'படிவம் இலவசம்தான். பணம் கொடுக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யலாம். என்ன ஆகும்?

'உங்களுக்கு பாரம்தான வேணும்? நேரா கார்ப்பரேஷன் ஆபீஸ் போங்க. அங்க ரிப்பன் பில்டிங் பின்பக்கத்தில் காலைல பத்து மணியிலிருந்து பத்தேகால் வரைக்கும் தருவாங்க. போயி வாங்கிக்கங்க இலவசமா.'

'அதற்கு போக வர ஆட்டோ சார்ஜ் மட்டும் அம்பது ரூபா ஆகுமேப்பா?'

'பஸ்ல போங்க. 23G ல போய்டுங்க.'

அவன் சொல்லும் பஸ் திருவான்மியூரில் இறக்கிவிட்டாலும் ஆச்சரியமில்லை. நான் சொல்லவருவது இதுதான். நேர் வழிகள் அத்தனையையும் கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். லஞ்சத்தை எதிர்ப்பதற்கு அசாத்தியப் பொறுமை வேண்டும்.

நன்றி: 'சுஜாதாவின் எண்ணங்கள்', தினகரன் தீபாவளி மலர் 2007.

Sunday, 23 August 2015

லிங்கூ, ஹைக்கூ

கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ  என்று  வித்தியாசமாக  வைத்தது சிறப்பு.  இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை.

---------------------------------------------------------------------

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் 

பிச்சைக்காரன் !

---------------------------------------------------------------------

இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை 

அதற்குள் குடிபுகுந்து விட்டன 

குருவிகள் !

 ---------------------------------------------------------------------

நீ வடம் பிடிப்பதற்கு 

முன்னதாகவே 

நகர  ஆரம்பித்துவிடுகிறது தேர் !

---------------------------------------------------------------------

ஒரு சிங்கத்தைக்

காதலித்திருந்தால் கூட  இந்நேரம்

சொல்லியிருப்பேன் !

---------------------------------------------------------------------

இஸ்திரி போடும் தொழிலாளியின்

வயிற்றில் சுருக்கம் !

---------------------------------------------------------------------

நீ ஊரில் இல்லை

அதுதெரியாமல்

திருவிழா கொண்டாடுகிறார்கள் !

---------------------------------------------------------------------

ஆசையாய் வாங்கினேன்

புத்தர்  சிலை !   

---------------------------------------------------------------------

மயான  கூரையின்  மேல்

காக்கையின் சத்தம்

யார் வரப்போகிறார்கள் !

---------------------------------------------------------------------

நீ தினமும் 

பால்கனியில் அங்குமிங்கும் 

நடந்தபடி படிப்பாயே 

அது வரலாறு ! 

---------------------------------------------------------------------

இன்னும் கொஞ்ச நேரம்

கண்களை மூடி

வேண்டக் கூடாதா  !

---------------------------------------------------------------------

இப்போதெல்லாம்  

ரிங்  டோன்களில்  மட்டுமே

கேட்க முடிகிறது

குருவிகளின் சத்தம் !

---------------------------------------------------------------------

சுஜாதா

கவிதா பத்மா உஷா 

அப்புறம் கீதா 

இவை எல்லாம் 

வெறும் பெயர்கள் அல்ல.

---------------------------------------------------------------------

பூச்சி மருந்தில் பூச்சி 

உயிரோடு 

---------------------------------------------------------------------

அசோகர் இத்தனை மரங்களை நட்டார் 

அதில் ஒன்று கூட போதி மரமில்லையா 

---------------------------------------------------------------------

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்

ஆப்பிள் விழுந்த கணத்தில் 

நியூட்டன் 

---------------------------------------------------------------------


Sunday, 17 May 2015

மே 17 - 2009

தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமுரும், 

கவிழ்ந்த இமைகள் ஓரு நாள் உயரும், 

இருகிய உதடுகள் ஓரு நாள் துடிதுடிக்கும், 

கருகிய பர்க்கள் ஓரு நாள் நறுநறுக்கும், 

அதுவரை நீங்கள் எங்களை ஆலுக 

அதுவரை உங்கள் வல்லம் ஒங்குக !!!

 


Credits: கன்னத்தில் முத்தமிட்டால் 



Sunday, 22 February 2015

Corporate உலகின் ஒரு அத்தியாயம் - I



பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - II  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  இரண்டாம் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

        Corporate உலகம் ஒரு விதமான பெரிய சொர்கம் என்றும் சொல்லலாம், ஆனால் நாம் யாரும் சொர்கத்தை பார்த்த்தது கிடயாது, எல்லாம் ஒரு யூகம் தான்,  சரி இந்த corporate வாழ்க்கை எப்படி இருக்கும்?, currency வாசம் வீசும், மேலே போட்டு இருக்கும் perfume களை  விட, அங்கு அங்கு ஆடைகளும் உண்டு, அணிகலன்கள் குறைத்த்து, சூரிய வெளிச்சம் கூட காண முடியாத ஒரு வாழ்க்கை எல்லாம் Online வாழ்க்கை தான்! உறவுகள் உட்பட, உணவு பழக்கம் கூட புதிதாய் பார்ப்பவர்களுக்கு எப்படி சாப்பிடுவது என்று? யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும், தவறா சொல்லலே அதுவும் உணவு தான்!  

இந்த உலகில் சந்தோஷம் அல்லது வருத்த்தமும் அவர்களின் style இல் outing என்று கூறி hotel, resorts, beach house அரட்டை! இது தான் அவர்கள் வாழ்க்கை, சும்மா சொல்லலா, அவர்களும் ஒரு A/c ரூம் விவசாயிக்க்கள் தான், working நாட்களில் clinet, error, bug fix, support, குறைகள், காரணம் என்று பல விதமான நெருக்கடிகளில் வாழும் வர்கம் தான்.

 இப்படி தான் நமது  சக்கரவர்த்தி பெயரிலேயே தெரிந்து இருக்கும் நம் கிராமத்து பக்கம்  வாழ்ந்து வளர்ந்த இளைஞன், இந்த corporate உறவுகள் அதை மாற்றி சக்ரா என்று அழைக்க ஆரம்பித்து  விட்டார்கள், அன்று அவனுக்கு முதல் outing, வேறு எங்கு, நீண்ட நெடுங்சலை, ECR Beach house தான், companyin புது project sign off, அதை கொண்டாடும் வகயில் காரணம் வேண்டுமே! 

சரி … சக்ரா விற்கு ஆங்கிலமே கொஞ்சம் ஏன், ரொம்பவே தடுமாற்றும், பின்பு இந்த பழக்கம், இடம், ஆட்கள், பார்க்கும் பழகும் மக்கள், அனைவரின் கால்களில் கலர் கலர் shoes. பளிச்சுனு சட்டை, லூஸான பணியங்கள், முட்டிகல்கள் வரை இருக்கும் pant, ஒருபுறம் modern phone photo எடுத்து உடனுக்குடன் Facebook update,  முக்கியமாக ஆண்களா பெண்களா என்று அடையலாம் கண்டு பிடிப்பது கடினம் ???… எல்லாமுமே புதிதாகவே இறுந்தது  இதனை விழித்த படி பார்த்து அமர்ந்து இருந்தான் சக்ரா,  சமயத்தே   இதை கண்டும் காணாத வகயில் phone இல் ஊருக்கு பேசுவதாக சில இடங்களில் இருந்து விலகி விலகி சென்று சமாளித்தான்  

நமக்கு தெரியுமே எல்லா இடத்திலும் நாம் ஒரு முறையாவுது இப்படி ஒரு சங்கடத்தில் இருந்திருப்போம் சரி இப்படி பட்ட இடத்தில் யாரவுது ஒருவரை வைத்து பொழுதை கழிப்பதாருக்கு ஒரு கூட்டம் காத்து கொண்டே இருக்கும், கண்டிப்பாக மத்தியில் நமது company இன் சுமார் மற்றும் super அழகிகளின் நடுவே ஒரு சில manager கல், மற்றும் சில lead மற்றும் அவர்களுக்கு தோதான engineer களும் சூழ ஒருவரை ஒருவர் கேலி பேசுவார்கள் ஒருவர் பற்றி பேசும் போது மற்றும் ஒருவரை அந்த பேச்சில் சேர்த்து விட்டு,  தப்பிப்பது வழக்கம்.  இதில் சில manager கல் மற்றும் சிலர் அவர்களின் குடும்பத்துடனும் வருவார்கள். அன்று சக்ரா அந்த கூட்டத்தின் பேச்சில் சிக்கினன், ஒரு manager style ஆக english இல் அவனை ஏதோ சொல்லி கிண்டல் அடித்தார் அனைவரும் கூபீர் என்று சத்தம் ஆக சிரித்தனர். சற்று கவனிக்காத அவன், அவர் சொன்னது புரியலை என்ன சொன்னார் என்று அருகில் இருந்த ஒரு நண்பரிடம் கேட்டான், அதற்கு அவனும் சில comment போட, இருக்குற அனைவரும் கூபீர் என்று சிரித்தனர். சக்ரா விருக்கு புரியவில்லை, ஆனால் நாமலேயே target பண்றாங்க என்று தெரிந்தது.  


உடனே அந்த manger என்ன சக்ரா english தான் இது புரியலயா என்று சிரித்த படி கேட்டார், அதற்கு சக்ரவர்த்தி இல்லை சார் இப்பதான் english கடலில் கால் நினைக்க ஆரம்பித்து இருக்கேன்?  விரைவில் கற்று கொள்வேன் என்று பரிதாபாக கூறினான், அதற்கு அந்த manager முக புருவங்களை தூக்கி ஒரு விதமான சிரிப்பை வெளிப்படுத்தி விலகினார், சக்கர விற்கு புரிந்தது அந்த சிரிப்பு, உடனே அங்கே அந்த manger க்கு தோதாக வேறு எந்த மொழி தெரியும் உனக்கு என்று ஒரு பெண் குரல்- மலயல்தில், அவன் பின்புறம் இருந்து அதே சொற்கள் ஆனால் தெலுகில் இருந்து ஒருவர், கூட்டத்தில் மற்றும் ஒருவர் அதே சொற்களை bengali இல் கூற, மற்றும் ஒருவர் அதே சொற்களை ஹிந்தியில் கூற சக்ரா விருக்கு ஒன்றும் புரியாம நிற்க, கூபீர் சிரிப்பு உடனே அந்த பக்கம் ஒரு குரல் உங்கள் Lunch ready Guys... உடனே சிரித்த படியே கூட்டம் நகர்ந்தது. சக்ரா வும் சரி நமக்கு தெரியவில்லை ? என்று ஆனாலும் இப்படியா செய்வார்கள் என்று ????  அவனும் சாப்பிட அவர்களுடன் சென்றான்.

            Manager கள், மாட்டிரும் lead கள் அவர்களின் குடும்பத்தினரை மற்றவர்களுக்கு அறிமுகம் படுத்திவைத்து உணவு சாப்பிட தொடங்கினார்கள். அங்கு ஒரு சிறுமி அமைதியாக அமர்ந்து இருந்தால், யாருடனும் பேசாமல், அது அந்த முக்கிய Manager இன் மகள், சக்ரா விடும் ஏளனமான சிரிப்பை வெளிப்படுத்தி, கிண்டலாக கூட்டத்தை பேசவைத்தவர். அவள் அருகே சென்று சில நேரம் பேச்சு கொடுக்க செய்தான் சக்ரா ஆனால் அவள் பேச வில்லை, உடனே அதை கண்ட அந்த Manager சக்ரா என சொல்ற ? கேடாக, இல்லை சார் எதுவுமே பேச மாற்ற, சக்ரா, சார் னு சொல்லாத னு பலமுறை சொலிருக்கேன், just call me Sanjay, சார் உங்க experience தான் என் வயசு அதான் கூப்பிட ஒரு தயக்கம், அதன், ohhhh… போதும் இதெல்லாம் வேண்டாம் change that சக்ரா? னு சொன்னார் அந்த Manager, okay சார். Dai…. Soon you need to change this Chakraa னு கூறி அவனுடன் நடந்து கொண்டே அவளுக்கு பேச முடியாது, மற்றும் நாம பேசுறதும் அவளுக்கு கேட்காது so அதன் இப்படி இருக்கா,  அவங்க அம்மா அங்கே பேசிட்டு இருக்கா so அவ வந்து அவல சமாளிப்பா இங்க எல்லாரும் இருக்காங்களா அவங்களோடு பேசு … Don't tell this to anybody for now ? But I hope everybody knows about this!  so only they are not ready to go and talk with her?, if you  remind them means they will talk about me with this issues ? better  you go and eat . உடனே சக்ரா என்ன சார் ???    இருங்க என்று அந்த  குழந்தை இடம் சென்று தன் கைகளை அசைத்து Sign Language இல் பேச ஆரம்பித்தான் சிரித்த படி, அவளும் தன் கைகளை அசைத்து sign language பதில் கொடுக்க, ஒரு சில நேரத்தில் அந்த  குழந்தை சத்தமாக சிரிக்க இருவரும் ஏதோ கைகளில் அசைத்து சந்தோஷமா பேசுவதை கண்டு அந்த கூட்டம் அமைதியாக பார்க்க ஆரம்பிச்சிது? இம் முறை ஒரே ஒரு சிரிப்பு சத்தம் அது அந்த குழந்தை அமுதாவின் குரல் தான் !!!!!... கூட்டம் வாய் அடைத்து பார்க்க!!!  

Sanjay, hi சக்ரா உனக்கு இது எல்லாம் தெரியுமா, என்ன சார், எனது தங்கையும் இப்படி ஒரு குறையால் இருந்தால் அப்பொழுது இதை கற்று கொண்டேன், நமக்கு தேவையான ஒரு மொழியை கற்று கொல்ல வேண்டியது  அவசியமே தவிர எல்லா மொழியும் தெரிந்து இருக்க வேண்டும் இல்லை ? உங்களுக்கு ஹிந்தி, English, மலயாளம், தெலுகு என்று தெரிந்தும் உங்கள் குழந்தை யுடன் பேச அது தேவை பட்டதா, ???? இப்படி தான் நாம் பலமுறை நம் project லயும் வேலை செய்கிறோம் என்று சிரித்த படி, பேசினான், அங்கு முழுதும் அமைதியாக, அந்த குழந்தை யின் சிரிப்பு மட்டுமே கேட்டது!!!!!

 -    சந்திரா

பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - II  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  இரண்டாம் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது
சந்திரா