Sunday, 29 May 2016

செருப்பு

நன்றி முகநூல் நண்பர்களுக்கு,

முகநூலில் என்னை கவர்ந்த ஒரு சிறுகதை, சில மாற்றங்களை செய்து கதையாய் எழுதி உள்ளேன்

எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே? அந்த மரத்தடியில செருப்புத் தைக்கிற பெரியவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியதுதானே! பெரியவர் கேர்ள்ஸ்னா காசு கேக்க மாட்டார். சரியான ஜொள்ளு பார்ட்டி!

சுமாரா இருக்குற எனக்கே நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்... நீ பாக்கறதுக்கு அப்படியே தமன்னாவாட்டம் பளபளனு இருக்கே. உன் காலைப் பார்த்துக்கிட்டே மடமடனு செருப்பைத் தைச்சுக் குடுத்துடுவார் பார்!’’  இதனை கேட்டும் சற்று யோசித்த படியே  வேறு வழியின்றி, அவள் பெரியவரிடம் சென்றால்


செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார். தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும், ‘‘கூலி எவ்வளவு?’’ என்றாள்.
‘‘என்னம்மா இது? உன்கிட்ட காசு வாங்குவனா கண்ணு! கிளம்பு’’ என்றார் பெரியவர்.‘‘பாத்தியாடி? நான் சொல்லலை... பெருசு ஜொள்ளு பார்ட்டிடி!’’ என்று கிசுகிசுத்தாள் தோழி.‘‘உஷ்...’’ என அவளை அதட்டிவிட்டு தமன்னா ஒரு இருபது ரூபா நோட்டை எடுத்துப் பெரியவர் முன் வைத்தாள்.

‘‘எடுத்துக்கங்க. இனி யாருக்கும் ஓசில செருப்பு தச்சிக் குடுக்கக் கூடாது. கூலியைக் கறாரா கேட்டு வாங்கிடணும். அப்பத்தானே தமன்னாவ காலேஜ்ல படிக்க வைக்க முடியும்? நம்ம பொண்ணு கூட காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்கதானேனு ஒரு பிரியத்தில யாருக்கும் ஓசில தச்சுக் குடுக்காதீங்க அப்பா!’’ என்றாள் கண்ணீருடன்!

இந்த கண்ணீருக்கு இரட்டை அர்த்தம் உண்டு அப்பாவை தோழிகளிடம் இருந்து மறைதர்தற்காக மட்டும் இல்லை, தந்தையை  சக தோழிகள் இழிவாக நினைத்து பேசி விட்டார்களே அதற்கும் நாமும் ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டோமே என்று.


 - சந்திரா

Sunday, 22 May 2016

ஈமெயில் முகவரி ஒருவரின் அடையாளத்தை மாற்றியது


என் நண்பர் ஒருவரின் இடம்  எனக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு தவறி போகின்றது என்பதை  பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் கூறிய குட்டி கதை

"வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்"

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான்.

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா?

எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’!!! என்றான்

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.  வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 100/- ரூபாய் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம்
வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 20/- ரூபாய்  லாபம் கிடைத்தது மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..?

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’என்றார் வியாபாரி...!

- சந்திரா
May 2016 - சந்திரா #எமது எழுத்தாணி