Sunday, 30 December 2018

விருமாண்டி - பெத்தராசு

பெத்தராசு, "போலீஸ் வந்திருச்சு, Inspector பேய்காமன் வந்திருக்கான்"

பேக்காமன்:  நீங்களும் விருமாண்டிய தான சந்தேகப்பட்றீக… FIR எழுதனும்ல 

Advocate பால்பாண்டி: ஆமா,பெத்தராசு, நைனாவ கொன்டவர கண்டுபிடிச்சி தான ஆகனும், விருமாண்டி எங்க இருக்கான்னு உங்களுக்கும் தெரியும்ல… 

பெத்தராசு: Mr.பால்பாண்டி உங்க அளவுக்கு பெரிய வக்கீல் இல்லனாலும், நானும் வக்கீல் தான், ஆனா நேர்மையான வக்கீல், அப்டி தான் இருக்கனும்னு எங்க நைனா சொல்லிருக்கார், So if you don't mind, 

பால்பாண்டி: சரி…சரி நீங்க பேசுங்க.. 

பெத்தராசு: எங்க நைனாவ கொன்னது யாருனு எனக்கு தெரியும்.. 

பேக்காமன்: யாரு…? 

பெத்தராசு: உனக்கும் தெரியும்.. கடசில சத்தியம் தான் ஜெயிக்கும்னு எங்க நைனா சொல்லிருக்கார், அத நான் இன்னிக்கு வரைக்கும் follow பண்ணிட்டு தான் இருக்கேன், விருமாண்டிக்கு எதிரா என் ஊர்ல இருந்து ஒரு புள்ள கூட சாட்சி சொல்லாது,  நாம என்ன பேசிட்ருக்கோம்னு இங்க எல்லாத்துக்கும் தெரியும், உனக்கு ஒரு மரியாதைக்காக தான் தனியா கூப்ட்டு பேசிட்ருக்கேன், 10 போலீஸ்காரன அடிச்சு தூக்கி எரிஞ்சுட்டு, போலீஸ் ஸ்டேஷன கொழுத்திட்டு ஜெயிலுக்கு போக எல்லாம் தயாரா இருக்கோம், ஆனா எங்க நைனாவோட இறுதி ஊர்வலம் கெளரவமா நடக்கனும்ஙகறதுக்காக தான் அமைதியா போறோம், தெரிஞ்சுக்கோ…🔥🔥🔥

"பெத்தராசு"

விருமாண்டி படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கதாப்பாத்திரம், படத்த எத்தன தடவ பாத்திருப்பனோ அத விட அதிகமான தடவ இந்த சீன பாத்திருப்பேன்,

கமல் சாருக்கு கூட, இவ்ளோ Mass-அ ஒரு சீன் இருந்ததானு தெரில எனக்கு..

"விருமாண்டிக்கு எதிரா என் ஊர்ல இருந்து ஒரு புள்ள கூட சாட்சி சொல்லாது"னு அவர் சொல்லும் போது…அப்ப்பா…

இந்த சீனையும், இந்த character-ஐயும் ஏன் முக்கியமா பேசனும்னு தோனுச்சுனா..

இந்த பெத்தராசு character-அ 

நல்லம நாயக்கர் தன் மகன்னு beginning Panchayat scene-ல introduce பண்ணிருப்பார், இப்புடி

"என் மகன் பெத்தராசு…

நெதம் கோர்ட் வாசல மிதிச்சிட்ருக்கான், 

ஏன்னா வக்கீலுக்கு படிச்சிருக்கான்"

பெத்தராசு படத்துல first Dialogue பேசுறது படத்துடைய 2hr 18th Minல தான்,

படம் full-அ பேசாம, ரொம்ப silent-அ  

subtle-அ ருக்குற ஒரு characterக்கு இப்புடி ஒரு சீன் வைக்குறது இருக்குல..

எப்பவுமே, 

எழுத்தாளர்- இயக்குனர் கமல்ஹாசன், தன்னுடைய கதாப்பாத்திரங்கள எழுதுற விதமும், ஒவ்வொரு காட்சியையும் stage பண்ற விதமும், ஒவ்வொரு Aspiring Filmmakersக்கும் MASTER CLASS தான்..

Pic & Credits: Reminding this through my Facebook page friend 

Tuesday, 2 October 2018

எப்படி வேணாலும் மாறலாம், இல்லையா? யாருக்குத் தெரியும் - பரியேறும் பெருமாள்

“தம்பி.. உன்கிட்ட ஒன்னு கேட்பேன். மறைக்காம சொல்லனும்.”

“சொல்லுங்க சார்.”

“நாங்க இவ்ளோ பண்ணியிருக்கோம்ல? நீ ஏன் என் பொண்ணுகிட்ட சொல்லவே இல்ல?”

“உங்களுக்கொன்னு தெரியுமா சார்? உங்க பொண்ணுக்கு என்ன விட உங்களதான் சார் ரொம்ப புடிக்கும். எனக்கு கிடைச்சமாதிரி அப்பா வேற யாருக்கும் கிடைச்சிருக்க மாட்டாங்கன்னு ரொம்ப சந்தோசமா சொல்லிக்கிட்டே இருப்பா. அதான் சொல்லல.”

“தேங்க்ஸ் பா. எனக்கும் தெரியும் தம்பி. என் பொண்ணுக்கு என்னைய எவ்வளோ புடிக்குமோ, அதே அளவுக்கு உன்னையும் புடிக்கும். அது மட்டுமில்ல. அவ உன்கூடயே இருக்கனும்னு ஆசப்படுறாங்குறதும் தெரியும்.

தம்பி, என் பொண்ணு உன் மேல இவ்வளவு பைத்தியமா இருக்கால்ல. அதேமாதிரி அவ மேல உனக்கு எந்த நினைப்பும் வரவே இல்லையா?”

“ தெரில சார். அது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள தான் நாய அடுக்கிற மாதிரி அடிச்சு, ரத்தம், சதைன்னு குத்திக் கிழிச்சுட்டீங்களே.

ஆனா உங்கப் பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சவ சார். அவ நெனச்சத நெனச்ச இடத்துல பேச முடியுதுல்ல. ஆனா, என்ன பாருங்க. நான் என்ன நினைச்சேன்னு சொல்றதுக்கே செத்துத் தொங்க வேண்டியதா இருக்கு.”

“சாரி ப்பா. நீ ரொம்ப நல்ல பையன். நீ ஆசப்பட்டது மாதிரியே வாழ்க்கையில பெரிய ஆளா வருவ. நல்லா படி. இப்போதைக்கு என்னால இத தான் சொல்ல முடியும். வேற என்ன சொல்றது?

பாக்கலாம். நாளைக்கு எது வேணாலும் எப்படி வேணாலும் மாறலாம், இல்லையா? யாருக்குத் தெரியும்.”

“எனக்குத் தெரியும் சார். நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நாங்க நாயாதான் இருக்கனும்னு நீங்க எதிர்பாக்குற வரைக்கும், இங்க எதுவுமே மாறாது. இப்படியேதான் இருக்கும்.”  - பரியேறும் பெருமாள்

Sunday, 19 August 2018

பாரதி சிறுகுறிப்பு - வ.உ.சி.யை வாழ்த்தியவன் - மக்களின் செயலறிந்து இகழ்ந்து நொந்தான்

‘வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ!’
என்று சிறைசென்றபோது வ.உ.சி.யை வாழ்த்தியவன் பாரதி. சிறையிலிருந்து வெளிவந்தபோது, அந்த மகத்தான மனிதனை நாடு மறந்துவிட்டதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் நிலைகுலைந்தது பாரதியின் இதயம்.

‘பிள்ளைவாள்,
அந்தக் கப்பல்களை
வெள்ளைக்காரனுக்கே
விற்றுவிட்டார்களாமே…
அதைவிட
சுக்கல்சுக்கலாய் உடைத்து
கடலில் கரைத்திருக்கலாமே…’
என்று கொதிக்கிறான் பாரதி, தன்னைப் பார்க்க புதுச்சேரிக்கு வந்த வ.உ.சி.யிடம்!

‘மாமா, உங்களுக்குத் தெரியாதா,
மானங்கெட்ட நாடு இது’ என்கிறார் வ.உ.சி.

‘நாட்டை இகழாதீர்கள்…..
மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்…’
என்று அந்த நிலையிலும் திருத்துகிறான் பாரதி, தேசத்தை விட்டுக் கொடுக்காமல்!

அதற்குப் பிறகாவது நாம் திருந்திவிட்டோமா? மனம் நொந்துபோய், பாரதிக்கே அதைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது…..

‘நாங்கள் மானங்கெட்ட மக்கள், பாரதி!’

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384

பாரதி சிறுகுறிப்பு - அகவை 37 அடைந்த தருணம் - கைதி எண் 253


பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த ‘இந்தியா’ பத்திரிகையின் சட்டப்பூர்வ ஆசிரியர் சீனிவாசன் 1908ல் கைது செய்யப்படுகிறார். உண்மையான ஆசிரியரான பாரதியும் கைதுசெய்யப்பட்டுவிடுவார் என்கிற நிலை. பிரிட்டிஷ் அரசின் வலையிலிருந்து தப்பிக்க, வ.உ.சி. உள்ளிட்ட நண்பர்களின் வற்புறுத்தலால், புதுச்சேரி போய்விடுகிறார் பாரதி. (புதுச்சேரி அப்போது பிரெஞ்சுக் காலனி.)

புதுச்சேரி பிடித்திருந்தாலும் ‘ஹோம் சிக்’ வதைத்துக் கொண்டே இருக்கிறது
பாரதியை! எப்படியாவது தமிழகத்துக்குத் திரும்பிவிடத் துடிக்கிறார். 1918 நவம்பர் 20ம் தேதி புதுவையிலிருந்து புறப்பட்டு விடுகிறார். இந்தியப் பகுதிக்குள் நுழைந்தவர், கடலூருக்கு அருகே கைதுசெய்யப்படுகிறார். 4 நாள் கடலூர் துணைச் சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தவர், 24ம் தேதி கடலூர் மாவட்ட தலைமைச் சிறைக்கூடத்துக்கு மாற்றப்படுகிறார். 25 நாள் சிறைவாசத்துக்குப் பின், டிசம்பர் 14ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அது, 37வது வயதில் அவர் அடியெடுத்துவைத்த நான்காவது நாள்.

அந்த 25 நாட்களில் சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து பழைய நிகழ்வுகளையும் நினைவுகளையும் கனவுகளையும் உணர்வுகளையும் பாரதி நினைத்துப் பார்ப்பதாக விரிகிறது – கைதி எண் 253. பாரதியின் கவிதைகளையும் சிந்தனைகளையும் பொருத்தமான இடத்தில் பொருத்தி, வியக்க வைக்கிறார் எழுத்தாளர்  சிற்பி.

இது சிற்பி எழுதியதா, பாரதி எழுதியதா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது பல இடங்களில்!

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384

Sunday, 8 July 2018

முதல் லெட்டர் - பிரபா ஆனந்தி

#KatradhuTamizh #TamizhMA

என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு letter,  Still I Remember my first letter

பிரபா,

நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும், நானும் அம்மாவும் இங்க maharashtra'ல தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்.  நீ வர்றதுக்கோ letter எழுதறதுக்கோ ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்.

நேரத்துக்கு சாப்பிடு,

வாரத்துக்கு மூணு நாளாவது குளி,

அந்த socks'ah  துவைச்சு போடு,

நகம் கடிக்காத,

கடவுள வேண்டிக்கோ!

- ஆனந்தி




2018 - சந்திரா