கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு. இந்த நூலில் இடம் பெற்று இருக்கும் கவிதைகளில் மிகவும் ரசித்த கவிதை.
---------------------------------------------------------------------
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
---------------------------------------------------------------------
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
---------------------------------------------------------------------
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
---------------------------------------------------------------------
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
---------------------------------------------------------------------
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
---------------------------------------------------------------------
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
---------------------------------------------------------------------
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
---------------------------------------------------------------------
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
---------------------------------------------------------------------
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
---------------------------------------------------------------------
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
---------------------------------------------------------------------
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
---------------------------------------------------------------------
சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல.
---------------------------------------------------------------------
பூச்சி மருந்தில் பூச்சி
உயிரோடு
---------------------------------------------------------------------
அசோகர் இத்தனை மரங்களை நட்டார்
அதில் ஒன்று கூட போதி மரமில்லையா
---------------------------------------------------------------------
வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில்
நியூட்டன்