Saturday 11 June 2016

Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 3



பதிப்பில் இருக்கும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 2  ஐ மற்றும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 1  ஐ
படிக்க கிளிக் செய்யவும்,  அந்த அதியாயங்களுக்கும்  இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

முகநுளில் என்னை கவர்ந்த ஒரு சிறு கதை, சற்று மாற்றங்கள் செய்து கதையாய் எழுதி உள்ளேன்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்  முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ  அவர் தான் அடுத்தமேலாளர்என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.  அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும்  ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.

அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.
ராமு  தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.  அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.  அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்


ராமு  தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.  முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு  தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான்கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு  மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது  | நேர்மையை விதையுங்கள் | பதவியும் பணமும் தேடிவரும்


பதிப்பில் இருக்கும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 2  ஐ மற்றும்
Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 1  ஐ
படிக்க கிளிக் செய்யவும்,  அந்த அதியாயங்களுக்கும்  இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

Sunday 5 June 2016

என் இனிய NRI's (வெளிநாடு வாழ் இந்தியர்)


எழுத்தாளர் சுஜாதாவின் பக்கங்களில் இருந்து சில வரிகளை எடுத்து கோர்வை படுத்தி உள்ளேன்

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.

அவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்…  இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.

இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன். 24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே… அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை? எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

நன்றி  சுஜாதா  SIR அவர்களுக்கு :-) 

Sunday 22 May 2016

ஈமெயில் முகவரி ஒருவரின் அடையாளத்தை மாற்றியது


என் நண்பர் ஒருவரின் இடம்  எனக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு தவறி போகின்றது என்பதை  பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர் கூறிய குட்டி கதை

"வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்"

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான்.

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா?

எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’!!! என்றான்

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.  வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 100/- ரூபாய் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம்
வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 20/- ரூபாய்  லாபம் கிடைத்தது மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..?

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’என்றார் வியாபாரி...!

- சந்திரா

Sunday 24 April 2016

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து



கவிஞர் வைரமுத்துவின் பக்கங்களில் இருந்து சில வரிகளை எடுத்து கோர்வை படுத்தி உள்ளேன்

“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?

எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?

இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை

எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை

கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்

அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை

மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை

ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை

பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?

மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்

நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்

“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”



நன்றி கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு


Saturday 5 March 2016

ஜன்னல் வழியே


அன்று மாலை 6:35 மயிலாப்பூர் ரயில் நிலையம், வந்து நின்ற வண்டியைத் தள்ளி செல்லும் அளவுக்குக் கூட்டம்  திருவிழா போல் தோன்றியது, ஆமாம் அன்று கபலிஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா, கடைசி பெட்டியில் குடும்பத்துடன் 12 பேரையும் ஏறு ஏறு  என்று உரக்கக் குரல் கொடுத்து, உள்ளே சென்று உட்கார இடம் தேடினர் நமது சிதம்பர சங்கர ராம ஐயர்.  ஆனால் பெட்டிக்குள் நமது குறவன் குறத்தி மார்கள் முழுதாக பெட்டியை ஆக்கிரமித்து இருந்தார்கள் மற்றும் அவர்கள் பணியில் சத்தம் போட்ட பாடிப் பேசி சிரித்து இருந்தனர்.  இதனைப் பார்த்து யோசிக்கும் முன்பே ரயில் மெல்ல நகரத் தொடங்கியது, சகிக்க முடியாமல் மேல்  கம்பியை பக்கத்தில் இருப்பவரிடம் ஷேர் செய்தார்.

அவர்களைக் கண்டு நமது சங்கர  ராமன்  தனது  கோபத்தைக்  குடும்பத்தினர் மீது கட்டினர், உங்களால் தான் இவளவு நேரம் ஆகியது. ஈஸ்வரா இதுவரை 8 ரயில்களை விட்டாயிற்று இதையும் விட்டா ஆத்துக்கு போக நிறைய நேரம் ஆகிடும் இங்கு இருந்து மத்திய கைலாஷ் போய், அங்கு இருந்து through பஸ் சிதம்பரதிருக்கு கடைச்சா பரவலா, இல்லை என்றால் பாண்டிச்சேரி  போய்டு அங்கு இருந்து ஊருக்கு  போகவேண்டும். எப்படியும் நாளை விடிஞ்சிரும்.  இத்துள இந்த பீடய்களுடன், பாண்டிச்சேரி  சென்றால் தண்ணி வண்டி தான் என்று புலம்பி கொண்டே ஜன்னல் வழியே கபலிஸ்வரர் கோயில் கோபுரத்தைத் தரிசனம் செய்யத்  தேடினர், ஆனால் தென் படவில்லை இருந்தாலும் கண்ணை மூடிக் கும்பிட்டு கொண்டார்.

வண்டி மந்தைவெளியைத் தாண்டா, சங்கர ஐயர் சத்தம் போட்டபடி, குறவன் குறத்தி மார்களின் பிள்ளைகளை அதட்டி நகர்ந்து செல்லுங்கள்  மேலே விழுந்து வைக்க போறிங்கள்.  குறத்தி ஒருத்தியின் பெண்பிள்ளை ,  இல்லை சாமி நீங்க ஆச்சாரமான ஆளுங்கள், வண்டி குலுக்கலா மேலே பட்டு இருக்கலாம், நாங்கள் வேண்டும் என்று செய்ய மாட்டோம் சாமி என்று பொறுமையாக பேசினால், அதற்கும் சங்கர ஐயர் முகதோற்றதை கோவமாகவும்  உதடுகளை முணுமுணுத்தபடி  பகவானே என்று கூறி திரும்பினர்.

பின்னர் பட்டினப்பாக்கம் ஸ்டேஷன் நெருங்க, ஐயர் இவர்களைப் பார்த்து கோபத்துடன் எங்கேயாவது இந்தக் கூட்டத்திற்கு அறிவு இருக்க, இவ்வாறு ஒரு ரயில் பெட்டியை ஆக்கிரமித்து வரோமே, நாம் இருந்த மத்தவங்க எப்படி வருவாங்கனு யோசிக்குதுங்கள , புலம்பல் சத்தம் அவர்களின் காதுகளில் விழ.  அதைக் கேட்ட அவர்கள் சாமி நாங்களும் மனிதர்கள் தான், காலையில் இருந்து அலைஞ்சு, திரிஞ்சு, கடைசி பெட்டியில் வந்து உட்காந்து இருக்கிறோம், ஏன் சாமி எங்களுக்கு இங்கேயும் இடம் இல்லையா?  உங்களை மாதிரி யாண அலுங்கல் எங்கள் மதிச்சாதான் மத்தவங்களும் எங்களையும் மனிதர்களா பார்பாங்க.  நீங்க எல்லாம் கடவுளுக்கு சேவை செய்றவங்க, உங்களை எல்லாம் நாங்கள் பெரிய எடத்துல வச்சிபாக்குறோம்

ஐயர்: அம்மம் அம்மம், சிதம்பரத்தில் இருந்து அதுக்கு தானே வந்தேன் பாரு? அங்கு இருந்த குறத்தியின் குழந்தையைப் போ போ தள்ளிப் போ என்று அதட்டினர்

குறவர் ஒருவர்: என்ன சாமி நீ? உங்களை மாதிரி சிலர் இருக்க, எங்களைப் பலர் மதிக்க மாற்றங்கள்.  நாங்களும் சக உயிர் தான். நீங்கள் கும்பிடும்  கபலிஸ்வறருக்கு படம் கற்று கொடுத்தவரின் வர்க்கம் நாங்கள்.

ஐயர்:  அட பிரமாதம், நல்ல வாய் அடிக்கிற கூட்டம்  ச்சா சானு  தள்ளி ஒதுங்கினர்.

கோட்டுர்புரம் ஸ்டேஷன் நெருங்க, வண்டிக்குள் 6 இராணுவ வீரர்கள் ஏற முற்பட்டார்கள், அதைக் கண்ட ஐயர்r, ஈஸ்வராஹ், இவர்கள் வேற பெட்டியில் இடம் இல்லை அடுத்த ரயிலை பாருங்கள் எறங்குங்க முதலில்
எறங்குங்கனு  சத்தம் போட்டார்.  பின்பு வேற வழி இல்லாமல் போய் தொலையுங்கள், ஆத்துக்கு போய் மொத்ததுல தலை முழுகனும்னு என்று போலம்பினர்.

இராணுவ உடையுடன் துப்பாக்கி வைத்து இருந்த 6 பேர்களும் பெட்டியின் வாயிலில் தொங்கிய படி நிற்க, முற்பகுதியில் நம்மவர்கள் எல்லாம் ஒய்யாரமாக உட்கார்ந்தும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தும் நிற்க.
உள்ளே இருந்து குரவர்கள் கூட்டம்  சாமி அவர்களை இங்கே கூப்பிடுங்கள் அய்யா, இங்க வாங்க உட்காருங்கனு பெரிய கோஷம் போட்டபடி குபிடனர், நாங்கள்  நிக்கறோம் வாங்க அய்யா நீங்க உட்காருங்கனு கையை பிடித்து அழைத்தனர்

சற்றே கோபம் அடைந்த  ஐயர், இங்க பலர் நிற்க அவர்களுக்கு இடமா துப்பாக்கியை  பார்த்ததும் பயம், போன ஸ்டேஷன்ல  நான்  பெசியதுற்கு எதிர்த்து பேசிட்டு, அதான் உங்களுக்கு எல்லாம் பயம் புடுதுற மாதிரி ஆட்கள் இருந்தா தான் அமைதியா ஆவிங்க.

குருவன்:  சாமி, எங்களுக்கு எதற்குப் பயம்.  வீடா? வாசலா?, கிடைக்கும் இடம் சொர்க்கம் அவளவுதான்.   இவர்களும்  எங்களைப் போல தான்! இது பயம் இல்ல சாமி மரியாதை.  நாட்டுக்கு வெளியில் நின்று தான் நம்மளவங்காள  பத்துகுரங்க, இங்கயாவுது உள்ள நிம்மதியா உட்காரட்டுமே  ஏன் இங்கையும் வெளியே ஆபத்துல நின்றுகொண்டு வரனும்,  நியாயபடி உங்களவர்கள் முன்வரிசையில் இடம் கொடுதருகனும், பாவம் உங்களுக்கு ஏதோ அசதி  போல , அதான் நாங்கள் இடம் கொடுத்தோம்.

ஐயர், முகம் வாடிப் பேச வார்த்தை இன்றி,  குறத்தி மகளைத் தூக்கி கையில் வைத்து அவமானத்தில் தலை குனிந்து  ஈஸ்வரா என்று கண்களை மூடித் திறந்தார், மத்திய கைலாஷ் ஸ்டேஷன்,  ஜன்னல்  வழியே  கைலாசநாதர் கோபுரம் தரிசனம் கிடைய்தது வண்டியில் இருந்து படியில் இறங்க, கேழே பஸ்  ஸ்டாப் இல்  சிதம்பரதிருக்கு through பஸ்  காத்து  இருந்தது.

- சந்திரா

Monday 29 February 2016

Corporate உலகின் ஒரு அத்தியாயம் - 2



பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - I  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  முதல் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது

முகநுளில் என்னை கவர்ந்த ஒரு சிறு கதை, சற்று மாற்றங்கள் செய்து கதையாய் எழுதி உள்ளேன்

ஒரு நாய் கடைக்கு வந்தது..கடைக்காரர் விரட்டி விட்டார்..  திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்தது... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது..

அப்போது ரெட் சிக்னல், அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்... நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...  கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...  நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....  கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

Corporate தர்மம் உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்,
இவ்வாறு நாமும் ஒரு முறையாவுது நின்று இருப்போம்


"நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது"


பதிப்பில் இருக்கும்  Corporate உலகின் ஒரு அத்தியாயம் - I  ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்,  முதல் அதியாயத்திருக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது
2016 - சந்திரா