Sunday 29 November 2020

நல்லவன் வாழ்வான்

சாரதா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய  முதல் பாடலின்  ஒலிப்பதிவு !

இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார்.

சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் குரல் சரியாக இல்லையென்று சொல்லி, அன்றும் ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. 

அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

அவ்வளவுதான் ! இயக்குனர் நீலகண்டன் ஒரு முடிவெடுத்து விட்டார்.

“வாலி  எழுதிய  இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு. எனவே   மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்” என்று சொல்லி விட்டார் நீலகண்டன்.

இதைக் கேட்ட வாலி வாடிப் போய் நின்றாராம். சற்று நேரத்தில் 

மருதகாசியையும் பாட்டு எழுத அழைத்து வந்து  விட்டார்களாம்.

வந்தவர் ஏற்கனவே வாலி  எழுதியிருந்த பாடலை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தாராம்.

பதைபதைக்கும் உள்ளத்தோடு, 

வாலி ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க, 

வாலி எழுதிய வரிகளை நிறுத்தி நிதானமாக வாசித்துப்  பார்த்த கவிஞர் மருதகாசி இப்படி சொன்னாராம் :

"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே படத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பாப்புலராகும்..!'' 

கண்களில் நீர் வழிய  வாலி சொல்கிறார் இப்படி :

“அண்ணன் மருதகாசிக்கு அன்றைக்கே மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்..!”

மருதகாசி மனதாரப் பாராட்டிய அந்தப் பாடல் :

"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.

சிந்திய கண்ணீர் மாறியதாலே'' 

படம் :"நல்லவன் வாழ்வான்''

நவம்பர் 29 - மருதகாசி நினைவு தினம். Sunday 8 November 2020

சுஜாதாவின் அறிவியல் ஆளுமை

எந்திரன் படத்தில் ஒரு காட்சி வரும்

வசீகரன்: பிரபஞ்சத்தில் மனித உயிர் என்பது ஒரு தனிப்பட்ட விபத்து. இவ்வளவு பெரிய பேரண்டத்தில் உயிர் மட்டும் தற்செயலாக அமைந்தது.

சிட்டி:  உயிர் என்றால் என்ன

வசீகரன்:   DNA என்ற மிகப்பெரிய மூலக்கூறு

சிட்டி: DNA வை வரைந்துவிட்டு "இதுதான் உயிரா" என்று கேட்கும்.

வசீகரன்:  "உயிர் என்பது ஃபார்முலா இல்லை, பாக்டீரியாவுக்கு உயிருண்டு சோடியத்திற்கு உயிரில்லை" என்பார். 

சிட்டி:  "எனக்கு உயிர் இருக்கிறதா ?" இந்தக் காட்சி பின்வருவாறு முடியும். 

சிட்டியின் மீது ஒரு மின்னல் அடித்து அதன் மூலம் சிட்டி தூரப் போய் விழும், ஆனால் அருகில் இருந்த வசீகரனுக்கு எதுவும் ஆகாது 

"இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர் பொருள் என்பதை யும், உயிர் ஆக்கப்பட்ட பொருளயும் உணர்த்தும்"

பணம் - சுஜாதா

என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது!.
எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது.
ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...
என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும்.

இது இயற்கை நியதி.
அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.
இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது,
செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.
இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான்.
இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.


November 2020 - சந்திரா