ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பால் இஸ்லாமியர் அல்ல. இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, தன் மதத்தில் எவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த செய்தி, ஒரு இனிய விஷயம் !
1967 இல் சேகர் என்பவரின் மகனாக பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் திலீப் குமார்.
இந்த நிலையில், 1989 ம் ஆண்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான் .
இஸ்லாம் மதத்தின் மிக மிக முக்கியமான கொள்கை
ஏக இறைவனுக்கு இணையாக எவரையும் சொல்லக் கூடாது.
ஆனால் 'நியூ' படத்திற்காக பாடல் எழுத வந்த வாலி, இதையெல்லாம் யோசிக்கவில்லை. அவர் பாடலை எழுதும்போது ஏ.ஆர். ரஹ்மானும் அந்த இடத்தில் இல்லை.
வாலி முதலில் எழுதிய வரிகள் :
"காலையில் தினமும்கண் விழித்தால் நான்
கைதொழும் தெய்வம் அம்மா !"
பாடலை எழுதிக் கொடுத்து விட்டு வாலி போய் விட்டார்.
ஒலிப்பதிவுக்காக வந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை படித்துப் பார்த்தார் .
அப்புறம் நடந்ததை வாலியே சொல்கிறார் இப்படி :
"‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் பாட்டு எழுதி விட்டு வர ரஹ்மானிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.
“வாலி சார்..”
“என்னய்யா..?”
“வாலி சார் ! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா வேற ஏதாவது சொல்லுங்க சார்!”
“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி சரி, தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ! என்று மாற்றிக் கொடுத்தேன்.”
வாலி வார்த்தைகளை மாற்றித் தர, தெய்வம் தேவதையாக மாறிப்போனது.
அந்த அழகிய பாடலும் உருவானது.
“காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா,
என் தாய் போல் ஆகிடுமா?”
Credits: John Durai Asir Chelliah