Sunday 15 December 2019

இளமையும் அரசியலும் - கவிஞர் விவேகா

‘கந்தசாமி’ படத்தில் கவிஞர் விவேகா எழுதிய ‘excuse me Mr.கந்தசாமி’ பாடல். 

சுச்சி மற்றும் விக்ரம் குரல்களில் பெப்பியான பாடல். காதலிக்கச்சொல்லி தொல்லை செய்யும் நாயகி, அவளை சமாளிக்கும் நாயகன் - இவர்களுக்குள்ளான உரையாடலைப் பாடலாக்கியிருப்பார்கள்.
‘வாலி’ வகை பாடல்கள் என்று தமிழ்சினிமாவில் ஒரு பாட்டுவகை இருக்கிறது. 

அதற்கு உதாரணமாக இந்தப் பாடலைச் சொல்லலாம். காரணம் இந்தப் பாடலுக்குள் இருக்கும் இளமையும் அரசியலும். 

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே, என்று சொல்லும் நாயகனுக்கு
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே, என்று நாயகி உலக அரசியல் சொல்வாள். 

கூடவே சேர்த்து இந்திய அரசியலும்
“காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஷ்யூம் தான்”

மிக முக்கியமான வரிகளாகச்  சொல்ல வேண்டியவை, இந்த ‘பெரியார்’ reference - வாலி வழி.
கடவுள் இல்லன்னு சொன்னார் ‘ராமசாமி’ 
காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி

இப்படிச் சொல்லும் நாயகனுக்கு நாயகி சொல்லும் பதில். 

“Noப்பா Noப்பா Noப்பா
சொன்னார் வள்ளுவர் Grandpa
ஊடல் தாண்டி கூடச்சொன்னார்
கடைசி குறளில் Sharpஆ”

இந்த வரியில் சொல்வதுபோல திருக்குறளின் கடைசிக் குறளில் அதாவது 1330வது குறளில் ஊடல் தாண்டிய கூடலைப் பற்றியும் அதன் இன்பத்தைப் பற்றியுமே எழுதியிருப்பார் வள்ளுவர்.

பால் : காமத்துப்பால்
அதிகாரம் : 133. ஊடலுவகை
குறள் எண் : 1330

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
December 2019 - சந்திரா