"திருட்டுப் பயலே" படத்துல வர்ற 'தையத்தா தையத்தா'
பாட்டை கேட்டுருக்கீங்களா?
பாட்டை கேட்டுருக்கீங்களா?
கண்டிப்பா கேட்டுருப்பீங்க..
அந்த பாட்டை ரொம்பப் பிடிக்க காரணம், அதுல இருக்க இசை, பாடல் வரிகள் இவைகளுக்கு இணையாக.. நடுவுல கரெக்டா 1:43 செகண்ட்ல சோனியா அவர்களோட வாய்ஸ் ஒண்ணு வரும்.. அதான் ரீஸன்…
"எல்லாருக்கும்தான் ஒரு கனவு இருக்கு.
எல்லாரும்தான் உழைக்கிறாங்க..
இந்த பக்கம் நூறு கடை இருக்கு,
அந்த பக்கம் நூறு கடை இருக்கு..
ஏறி இறங்கு..
ஒரு வேலையை வாங்கிட்டு.. வா என் கழுத்தை நீட்டுறேன்"
சோனியா அகர்வால்'க்கு கொடுத்த அந்த டப்பிங் அவ்ளோ நல்ல இருக்கும்.. பெருசா காரணம் என்னன்னு தெரியாது இந்த பாட்டுல அந்த குறிப்பிட்ட இடம் வரும்போது மட்டும் ஒரு மத்தாப்பு சிரிப்பு மனதுக்குள் வரும்.
இந்த பாட்டுல, இந்த குறிப்பிட்ட போர்ஷன்ல இசை எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு, திடீர்னு சோனியா அகர்வால் பேசுற அந்த மாடுலேஷன், அந்த குரல்ல இருக்க ஒரு சாந்தத்தன்மை அவ்ளோ ஈர்ப்பா இருக்கும்…
Kanmani Pandian, இவங்கதான் அந்த காந்தகுரலுக்கு சொந்தக்காரர்..)
இதன் தொடர்ச்சியாக "என் கழுத்தை நீட்டுறேன்னு அவங்க சொன்னதும்" நிலங்கள் உடைந்து போனாலும்'ன்னு வைரமுத்து வின் வரிகளுக்கு சாதனா சர்க்கம் அந்த செகண்ட்ல ஒரு வாய்ஸ் கொடுப்பாங்க.. ப்பா… ஒரு nostalgic vibes வரும்.
"நிலங்கள் உடைந்து போனாலும்
நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல்
அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேரொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன்
என் உரிமை ஆனவன்
பசி ருசியை
பகல் இரவை
பகிர்ந்து கொள்ளும் தலைவன்
தையத்தா"