"பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை"
அமைதி அரசர் புத்தரும் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தை தான் சொல்ராங்க!!! - அறை எண் 305 இல் கடவுள் திரைப்படத்தின் ஒரு காட்சி
எம்.எஸ் பாஸ்கர்:
கடவுள் ஒரு காட்டுமிராண்டி சார்
என்னை போட்டு பாடாப் படுத்துறான்.
எனக்கு ஒரே பொண்ணு சார்
பயபுள்ள என் கிட்ட ரொம்ப பிரியமா இருக்கும்.
வெள்ளாளப்பட்டில கல்யாணம் பண்ணி கொடுத்தோம்
மாப்பிள்ளையும் நல்லவர் தான்.
என்ன பிரச்சனைன்னு தெரியல
நாலு நாளைக்கு முன்னாடி
எம்புள்ளைய வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாரு
எம்புள்ள ஓ-னு அழுகுறா
பிரகாஷ்ராஜ்:
முதல்-ல அழுகைய நிறுத்துங்க
அழுகைய நிறுத்துங்க
நான் ஒன்னு சொல்லட்டுமா?
எம்.எஸ் பாஸ்கர்: சொல்லுங்க
பிரகாஷ்ராஜ்:
நீங்க தினமும் கும்புடுற புத்தர் "அக்சப்ட் தி பெயின்-னு" (Accept The Pain) சொல்றாரு
அதுக்கு அர்த்தம் தெரியுமா?
எம்.எஸ் பாஸ்கர்:
"அரசமரத்து பூவ வையி"னு அர்த்தம்னு பிரபு சொன்னாரு.
தினமும் வைக்குறேன் சார்
பிரகாஷ்ராஜ்: அவன் கிடக்குறான் லூசு
அக்சப்ட் தி பெயின்-னா "வலியை ஏத்துக்கணும்னு" அர்த்தம்
அதான் வாழ்க்கை
எம்.எஸ் பாஸ்கர்:
என்ன சார் கேனத்தனமா இருக்கு ?
எதுக்கு சார் வலிய ஏத்துக்கணும்?
பிரகாஷ்ராஜ்:
சொல்றத கேளுங்க
இப்ப நீங்க ஊர்ல ஜிம்முக்கு போய்கிட்டு இருந்தேனு சொன்னிங்க
எம்.எஸ் பாஸ்கர்: ஆமா
பிரகாஷ்ராஜ்:
ஏன் உங்க ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஜிம்முக்கு போறாரு
அங்க என்ன சொல்லி கொடுக்குறாங்க
எம்.எஸ் பாஸ்கர்: என்ன சொல்ராங்க?
பிரகாஷ்ராஜ்:
நாம பயிற்சி பண்ணும் போது தசையெல்லாம் வலிக்கும்-ல
வலி இருந்தா அந்த தசை ஆரோக்கியமா விரிஞ்சுக்கிட்டு இருக்குனு தானே அர்த்தம்?
அந்த வலி இருந்தால் தானே தசையவே உங்களால உணர முடியுது.
அதே மாதிரி தான் வலி இருந்தால் தான் வாழ்க்கையை உணர முடியும்.
இதோ பாருங்க உங்க மகள் மருமகனோட பிரிவு
அவுங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்குற அன்ப அதிகமாக்கும்.
வாழ்க்கை அழகா இருக்கும்.
"பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை" உங்க அமைதி அரசர் புத்தரும் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தை தான் சொல்ராங்க "வலியை ஏத்துக்கிட்டா வளமா இருக்கலாம்"
No comments:
Post a Comment