“தம்பி.. உன்கிட்ட ஒன்னு கேட்பேன். மறைக்காம சொல்லனும்.”
“சொல்லுங்க சார்.”
“நாங்க இவ்ளோ பண்ணியிருக்கோம்ல? நீ ஏன் என் பொண்ணுகிட்ட சொல்லவே இல்ல?”
“உங்களுக்கொன்னு தெரியுமா சார்? உங்க பொண்ணுக்கு என்ன விட உங்களதான் சார் ரொம்ப புடிக்கும். எனக்கு கிடைச்சமாதிரி அப்பா வேற யாருக்கும் கிடைச்சிருக்க மாட்டாங்கன்னு ரொம்ப சந்தோசமா சொல்லிக்கிட்டே இருப்பா. அதான் சொல்லல.”
“தேங்க்ஸ் பா. எனக்கும் தெரியும் தம்பி. என் பொண்ணுக்கு என்னைய எவ்வளோ புடிக்குமோ, அதே அளவுக்கு உன்னையும் புடிக்கும். அது மட்டுமில்ல. அவ உன்கூடயே இருக்கனும்னு ஆசப்படுறாங்குறதும் தெரியும்.
தம்பி, என் பொண்ணு உன் மேல இவ்வளவு பைத்தியமா இருக்கால்ல. அதேமாதிரி அவ மேல உனக்கு எந்த நினைப்பும் வரவே இல்லையா?”
“ தெரில சார். அது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள தான் நாய அடுக்கிற மாதிரி அடிச்சு, ரத்தம், சதைன்னு குத்திக் கிழிச்சுட்டீங்களே.
ஆனா உங்கப் பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சவ சார். அவ நெனச்சத நெனச்ச இடத்துல பேச முடியுதுல்ல. ஆனா, என்ன பாருங்க. நான் என்ன நினைச்சேன்னு சொல்றதுக்கே செத்துத் தொங்க வேண்டியதா இருக்கு.”
“சாரி ப்பா. நீ ரொம்ப நல்ல பையன். நீ ஆசப்பட்டது மாதிரியே வாழ்க்கையில பெரிய ஆளா வருவ. நல்லா படி. இப்போதைக்கு என்னால இத தான் சொல்ல முடியும். வேற என்ன சொல்றது?
பாக்கலாம். நாளைக்கு எது வேணாலும் எப்படி வேணாலும் மாறலாம், இல்லையா? யாருக்குத் தெரியும்.”
“எனக்குத் தெரியும் சார். நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நாங்க நாயாதான் இருக்கனும்னு நீங்க எதிர்பாக்குற வரைக்கும், இங்க எதுவுமே மாறாது. இப்படியேதான் இருக்கும்.” - பரியேறும் பெருமாள்
No comments:
Post a Comment