Sunday 25 September 2022

அதென்ன "ஈயாரி எசமாரி" - பொன்னி நதி பார்க்கணுமே

பொன்னி நதி பார்க்கணுமே… பாடல் பட்டி தொட்டி எங்கும் 

ஒலித்து க்கொண்டு இருக்கிறது

அதென்ன  "ஈயாரி எசமாரி" chorus 

இது rhyming க்காக உபயோகப்படுத்தப்பட்ட இசை சொற்கள் என்று தான் பலர் நினைத்து இருப்போம், தெலுங்கு ஹிந்தி பாடல்களை கேட்கும் போது இது வேறு வார்த்தைகள் கொண்டு பாடப்பட்டது தெரிந்தது,  Rhyming words என்றால் அங்கேயும் அதே தானே இருக்க வேண்டும் என யோசித்து இதுக்கு அர்த்தம் ஏதும் இருக்குமோ என பார்த்தால்.. ஆம் உள்ளது

அவர்கள் பாடுவது 

ஈ + ஆரி + எச‌ + மாரி

தமிழில் ஒற்றை எழுத்துக்கு பொருள் உள்ளன என நாம் அறிந்ததே (உதா: ஆ - பசு, கோ - அரசன், உ - சிவன், ஐ - அழகு)

என்கிற சொல்லுக்கு ஒரு அர்த்தம் வில், அம்பு, ஈட்டி போன்ற போர் ஆயுதங்கள் 

ஆரி - என்றால் வீரன்

எச - இசை

மாரி - மழை 

அதாவது chorus பாடுவதின் பொருள் 

"வில் வீரனின் இசை மழை"

பாட்டின் சூழலுக்கு கச்சிதமாக பொருந்தும் வரிகள்

வாழ்த்துகள் இளங்கோ கிருஷ்ணன் (பாடலாசிரியர்), மணிரத்னம், ஏ. ஆர். ரகுமான்


Content Credits: - இரா. இராஜகோபாலன்

No comments:

அதென்ன "ஈயாரி எசமாரி" - பொன்னி நதி பார்க்கணுமே - சந்திரா