புத்தனாவது சுலபம்,
ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது…???
புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்….
மனைவி கேட்கிறாள்:
"என்னை விட்டுப் போனது பரவாயில்லை" ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே!
நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன்.
ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது.
ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்….???
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல! தன்னைத் தான் என்கிறார்.
மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.
அது இது தான்:
"நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே
தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா…???"
புத்தர் சொல்கிறார்: "தாராளமாக….."
அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால்,
இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல….
புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.
புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா… ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது… அவளை வாழாவெட்டி என்றது.
அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை.
ஒற்றைக் குழந்தை ராகுலன்.
விடுமா ஆண்வர்க்கம்….???
சாதாரணமாய் இருந்தாலே விடாது.
உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்…..???
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள்.
தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள்.
ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.
எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.
எது கடினம்…..???
சொல்லுங்கள் யார் துறவி இப்போது…???
No comments:
Post a Comment