Thursday, 12 December 2024

காதல் - ஸ்டைல் - ரஜினி

புதுக்கவிதை”யின் அந்த சந்திப்புக் காட்சி. படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல் இத்தியாதிகளில் சிக்கித் தவித்திருக்கும் படம், எனினும் அந்த ஒரு காட்சியில் உடல்மொழியும் நடிப்பும் ‘ரஜினி’ என்பதைக் கடந்து ரசிக்கச் செய்திருப்பது சற்றே ஆச்சர்யமானது தான்.

”உங்கிட்ட ஒன்னு கேக்க ஆசைப்படுறேன். அனுமதி குடுப்பியா?”

”கேளுங்க”

”நீயாவது நல்லாயிருக்கியா?”

“நீயாவது நல்லாயிருக்கியானு கேட்டீங்களே.. அதுக்கென்ன அர்த்தம்?”

”நான் உன்னை நலம் விசாரிச்சுட்டு, பதிலுக்கு நீ என்னை கேக்கலனா என்னால தாங்கிக்க முடியாது. அதுனால அப்படி சொன்னேன்.”

“நான் போலாமா?”

”அதான் போயிட்டியே”

”நீங்க என்னைக் கேட்டது மாதிரி நானும் உங்களை ஒன்னு கேக்கலாமா?”

என்றதும் ”Go ahead Go ahead” என்பதாய் முகம் திரும்பும்போது தலைவர் ஜொலிக்கிறார்.  அதிலேயும் அந்த "அதான் போயிட்டியே" சொல்லும்போது சட்டுனு கோபம் கலந்த ஒரு சின்ன எக்ஸ்பிரசன்

பக்கம் பக்கமாய் பேசும் வசனங்களால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை, ஒரு BGM அல்லது ஒரு ஒன்லைன் அசால்ட்டாக செய்துவிடுகிறது.

தளபதியில் ”போ.. கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோசமா இரு” என்பதற்குப் பிறகான BGM போல.. 

கபாலியின் ”மாயநதி” போல…

காலா படத்துல ex ஒட பொண்ணு தலையை (song ல ) தடவிகுடுத்துட்டு போவாரு அப்போ அவங்க ex அதை கரெக்ட்ட புரிஞ்சிகிவாங்க.. அதெல்லாம் அட்டகாசமா பண்ணிருப்பாரு

காதல் நல்லாத்தான் வந்திருக்கு. நாம தான் வெறும் ஸ்டைல் மட்டும் போதும்னு சொல்லிச் சொல்லியே அவரை நம்ப வச்சுட்டோம்.

No comments:

காதல் - ஸ்டைல் - ரஜினி - சந்திரா